தேர்தல் ஆணைக்குழுவினால் இன்று (03) அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேர்தல் முறைமைக்கு அமைய, கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
