தொழிலதிபர் மனோகரன் அண்ணா(பிரான்சு) வாகன விபத்தில் உயிரிழந்த தகவல் எங்கள் எல்லோரையும் மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.
எங்கள் ஊடக மற்றும் சேவைப் பயணங்களை நீண்ட காலமாக ஆழ்ந்து நோக்கி தானாக முன்வந்து உங்கள் சேவைக்கு நான் கட்டாயம் ஏதும் உதவி செய்ய வேண்டும் அனு என்று மனமுவந்து அளித்த பண உதவியால் தான் எங்கள் கலைஞர் 2026 நிகழ்வில் பங்கு பெற்ற எங்கள் கலைஞர்களுக்கு நினைவுக்கேடையங்கள் வழங்கி மதிப்பளித்தோம் நாம். ![]()
.
எங்களுக்கு மட்டுமல்ல பல சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு மிகுந்த ஆதரவாக கொடையளித்த வள்ளல். பழகுவதற்கு மிக இனிய குணம் கொண்ட சகோதரர் ![]()
. இவ்வாறான மனிதர்களை இவ்வுலகில் காண்பது அரிதிலும் அரிது.அவரது பிரிவு தாங்கொணாத் துயரத்தைத் தந்திருக்கிறது. இவரது இழப்பை ஒரு சமூக இழப்பாகவே கருதுகின்றோம். ![]()
![]()
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு மிக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்ம அமைதிக்காய் மனமுருகி ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
