நாமல் ராஜபக்ச மற்றும் சிராந்தி ராஜபக்சக்களது கைதுகளையடுத்து தனது கைதும் அரங்கேறலாமென்ற அச்சத்தில் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்ற படிகளில் அலையத்தொடங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரிய மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, விசாரணைகளின் அடிப்படையில் தம்மைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே முன்னாள் ஜனாதிபதி தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவில் காவல்துறை அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் விசுவாசி சுரேஸ்சாலே கைதாகியுள்ளார். இந்நிலையிலேயே தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரிய மனுவை கோத்தபாய தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை செய்திகள்
