பிரான்சில் பள்ளிப் போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், காவல்துறையினருடன் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், போராட்டத்தில் ஒரு கையெறி குண்டு வெடிப்பில் பதின்வயது இளைஞர் ஒருவர் தனது கையை இழந்துள்ளார்.
15 வயதான அந்த இளைஞர், வடக்கு நகரமான லென்ஸில் படுகாயம் அடைந்தார். அவர் ஒரு அதிர்ச்சிக் கையெறி குண்டை எடுத்ததாக சரிபார்க்கப்படாத காவல்துறை அறிக்கைகள் தெரிவித்தன.
போதுமான பணியாளர்கள் இல்லாத மற்றும் பழுதடைந்த பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழைந்த நிலையில், 500 பள்ளிகள் வரை மூடப்படும் என்று பிரான்ஸ் அறிவித்திருந்தது.
சிறார்களுக்கு எதிராக வரம்பு மீறிய காவல்துறை பலம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், போராட்டங்கள் மீதான அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிதப்படுத்த வேண்டும் என்று விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட்-பெஹால் தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளிக்கு அருகே காயமடைந்த அந்த இளைஞர், லில்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
