ஈழத் தமிழ் சினிமாவில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு கதை மட்டுமல்ல; அதற்குப் பின்னால் ஒரு போராட்டமும், பலருடைய உழைப்பும், கனவும் இருக்கிறது.
அந்த வகையில், தற்போது பேசப்பட்டு வரும் “போராட்டம் ” திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு, பிரான்ஸ் Bobigny நகரில் அமைந்துள்ள Cinéma Alice Guy திரையரங்கில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது.
இந்த திரைப்படத்தை Baskaran Kandiah அவர்கள் வழங்குகிறார். எமது ஈழத் தமிழ் சமூகத்துடன் நெருக்கமாகப் பயணித்துவரும் அவருடைய குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள அவரது மகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“போராட்டம் ” திரைப்படம் பேசும் கதை, எமது வாழ்வியலோடும் சமூக உணர்வோடும் ஈழத் தமிழ் சினிமாவிற்கு முக்கியமான ஒரு படைப்பாக இதனை நாம் பார்க்கலாம்.
ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், கலைஞர்களின் முயற்சியையும் மதித்து, இப்படியான படைப்புகளுக்கு எமது ஆதரவை வழங்குவது மிகவும் அவசியம்.
அதனால், பிரான்சில் வாழும் அனைத்து ஈழத் தமிழ் திரைப்பட ஆர்வலர்களும், கலைஞர்களும், நண்பர்களும் இந்தச் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்து திரைப்படக் குழுவினருக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
27.09.2026 | ஞாயிற்றுக்கிழமை
மாலை 6.00 மணி
Cinéma Alice Guy – Bobigny, France
ஒரு திரைப்படத்தை உருவாக்குவது ஒரு போராட்டம்…
அதைத் திரையரங்கில் வந்து பார்ப்பது அந்தப் போராட்டத்திற்கான நமது ஆதரவு. ![]()
![]()
“போராட்ட” திரைப்படக் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
