தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இதன்படி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த ஜூன் 22ந் தேதி அறிவித்தார்.
அன்றைய நாளில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
அதன்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை நடைபெறுகிறது.
இதற்காக முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் 89,955 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
