யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய ஐந்து மாவட்டச் செயலகங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதனடிப்படையில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இச்சேவை மீண்டும் ஆரம்பமாவதால் நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்திற்குச் செல்லும் அசௌகரியம் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
