யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரை வளாகத்தினுள் தொடர்ச்சியாக புதிய சட்டவிரோத கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை திருட்டு மௌனம் காத்துவருகின்றது.
‘மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்’ என இந்த அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஆனால், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதாகக் கூறியவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அக்காணிகளுக்குள் இப்போதும் தொடர்ச்சியாக சட்டவிரோத கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலிகாமம் வடக்கு பிரதேசசபை இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள உள்ளுராட்சி சபையாகும்
