வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் காவல்துறை பிணையில் விடுத்துள்ள காவல்துறையினர் , ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
