2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
