அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எவ்வித முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) நாடாளுமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இதனால் குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்தாக குறிப்பிட்டுள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
