50 ஆண்டுகளுக்கும் மேலான கால்பந்து பாரம்பரியத்தைக் கொண்ட தீவகத்தின் #அல்லைப்பிட்டி மண்ணைச் சேர்ந்த 16 வயதுடைய தேவகுமார் சாருஜன், இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட (U17) தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு தீவகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சாருஜன், அப்பகுதியிலிருந்து தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை லாவோஸில் நடைபெறவுள்ள ஆசிய 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்துத் தொடரில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சாருஜன் களமிறங்கவுள்ளார்.
நீண்டகால கால்பந்து பாரம்பரியத்தைக் கொண்ட அல்லையூர் மண்ணிலிருந்து உருவாகியுள்ள இளம் வீரரின் இந்தச் சாதனை, தீவக மக்களிடையே மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதிலேயே தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச தொடரில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள தேவகுமார் சாருஜனுக்கு தீவக மக்கள் சார்பில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மகேன் யாழ்
RKS
Weniger anzeigen
