40வருடங்கள் கடந்துள்ள நிலையில் 1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க என்பவரால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாக்ய ஹேரத்தினால் அது உறுதி செய்யப்பட்டது.
கருப்பு ஜூலை சம்பவம் குறித்து முழுமையான ஆய்வு செய்து அறிக்கையிடுதல், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பில் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதே விசேட குழுவின் நோக்கமாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை தொடர்பிலான முன்மொழிவுகளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேணை மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
