யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்துவேலு விஜயலட்சுமி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த குறித்த பெண், தனது மகனுடன் அராலி மத்தி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
