யுத்தத்தால் இடம்பெயர்ந்து அகதியாக இந்தியா சென்று அங்கு சாதிக்க பிறந்த டிசாதனாவின் கதை
Super Singer மேடையில் ஒலித்த 19 வயது இலங்கை தமிழ் பெண்ணின் குரல்…..
அகதியாக இருப்பது கனவு காண்பதை தடுக்காது…
இந்த நம்பிக்கையை அவரது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார் 19 வயதான டிசாதனா..
இலங்கையில் இருந்து அகதியாக இந்தியா சென்ற குடும்பத்தில் பிறந்தவர்.
குழந்தை பருவத்தின் ஒரு பகுதியை அகதி முகாமில் கழித்தவர்.
இன்று தமிழ்நாட்டில் இசை இரசிகர்களால் அறியப்படும் இளம் பாடகியாக உருவெடுத்துள்ளார்.
ஒருபுறம் Physiotherapy மாணவி.
மறுபுறம் இசையின் மீது தீராத காதல் கொண்ட பாடகி.
இந்த இரண்டு கனவுகளையும் ஒரே நேரத்தில் சுமந்து கொண்டு வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் டிசாதனா..
அகதி முகாமில் இருந்து சென்னைக்கு…
டிசாதனாவின் குழந்தை பருவம் இலங்கையர்களுக்கான அகதி முகாமில் தொடங்கியது.
அங்கு வளர்ந்த காலத்தில், உயர் கல்வி மற்றும் இசை போன்ற கனவுகள் எளிதானவை அல்ல.
குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது குடும்பம் பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தது.
ஆனால் இடம் மாறியதால் அனைத்து தடைகளும் மறைந்து விடவில்லை.
அகதி என்ற அடையாளத்துடன் வாழ்வதற்கான சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்தன.
“அரசாங்க தேர்வுகளில் என்னால் தோற்ற முடியாது. கடவுச்சீட்டு இல்லாததால் இந்தியாவுக்கு வெளியேயும் பயணம் செய்ய முடியாது. வரம்புகள் இருக்கின்றன. ஆனால் எது சாத்தியமோ அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன்” என்று டிசாதனா தெரிவித்துள்ளார்.
இசை திறந்த கதவு
அவரது வாழ்க்கையில் இசை ஒரு புதிய கதவைதிறந்தது.
Little Champs இசை போட்டியில் பங்கேற்ற டிசாதனா, அங்கு இரண்டாம் இரண்டாம் இடத்தை பெற்றார்.
அந்த அனுபவம் அவருக்கு நம்பிக்கையை அதிகரித்தது.
பின்னர் பல இசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன.
அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த வருமானத்தை தனிப்பட செலவழிப்பதற்கு பதிலாக, அவரின் இசை பயிற்சிக்காகவே முதலீடு செய்தார்.
அவரது தாயும் மகளின் கனவுக்கு உறுதுணையாக இருந்தார்.
குடும்பத்தை ஆதரிப்பதற்காக பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய அவரது தாய், மகள் இசை பயணத்தை தொடர ஊக்கமளித்தார்.
அதன் பின்னர் சுமார் பத்து ஆண்டுகள், கல்வியுடன் இசை பயிற்சியையும் இணைத்து தொடர்ந்து வந்தார் டிசாதனா.
2026 பெப்ரவரி 1 – மறக்க முடியாத நாள்
பல ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்புக்கு பின்னர், அவரது குரல் மிக பெரிய இசை மேடையை அடைந்தது.
2026 பெப்ரவரி 1ஆம் திகதி நடைபெற்ற Super Singer Season 11 இறுதி போட்டியில் Dishatana முதல் இரண்டாம் இடத்தைபெற்றார்.
அகதி முகாமில் வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு இளம் பெண்ணுக்கு, இவ்வளவு பெரிய இசை போட்டியின் இறுதி மேடையில் நிற்பது வெறும் போட்டி வெற்றியாக மட்டும் இருக்கவில்லை.
அது பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட பயிற்சிக்கும், அவரது குடும்பத்தின் ஆதரவுக்கும் கிடைத்த ஒரு முக்கியமான அங்கீகாரமாக அமைந்தது.
அவரின் வெற்றியை மற்றவர்களுக்கும் பகிர்கிறார்
டிசாதனாவின் பயணம் அவருக்கானது மட்டும் அல்ல.
அவரது வாழ்க்கையை பார்த்து ஊக்கமடைந்த அகதி குழந்தைகளும் இளைஞர்களும் அவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.
அவர்கள் கல்வியை தொடர வேண்டும் என்றும், இருக்கும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் டிசாதனா ஊக்குவித்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டில் நான்கு இளம் பாடகர்களுக்கு இசை பயிற்சியும் வழங்கியுள்ளார்.
பணம் இல்லாததால் திறமையை வளர்த்து கொள்ளும் வாய்ப்பை யாரும் இழக்க கூடாது என்பதற்காக, குறைந்த கட்டணத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக தெரிவிக்கிறார்.
இன்னும் முடியவில்லை…
Super Singer மேடை அவரது பயணத்தின் முடிவு அல்ல.
இரண்டு கனவுகளை ஒரே நேரத்தில் தொடர்கிறார்..
ஒருபுறம் Physiotherapy துறையில் கல்வியை நிறைவு செய்து வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.
மறுபுறம் இசையில் தொடர்ந்து பயணித்து, இன்னும் பெரிய மேடைகளில் பாட வேண்டும்.
ஒருநாள் சர்வதேச அளவில் பயணம் செய்து பாட வேண்டும் என்பதும் அவரது கனவு.
அதோடு, அவரை போல கனவு காணும் மற்ற இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக உள்ளது.
ஒரு குரல்… பலருக்கு நம்பிக்கை
ஒரு காலத்தில் அகதி முகாமில் குழந்தை பருவத்தை கழித்த சிறுமி…
இன்று ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பாடும் இளம் கலைஞர்.
அவரது வாழ்க்கை, சூழ்நிலைகள் ஒருவரின் கனவுகளை வரையறுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை காட்டுகிறது.
டிசாதனா சொல்வது போல,
“எனது பயணம், அகதியாக இருப்பது கனவு காண்பதைத் தடுக்காது என்பதை காட்டுகிறது. ஒருவர் வெற்றி பெறும்போது, அது பலருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.”
அகதி முகாமில் தொடங்கிய அந்தச் சிறுமியின் குரல் இன்று ஒரு பெரிய இசை மேடையை எட்டியுள்ளது.
அந்த குரல் இன்னும் பல இளம் கனவுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் இனி எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயம்.
Weniger anzeigen
