சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை நடைபவனியாகச் சென்று நிறைவடைந்தது.
