முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சரும் கொழும்பு முன்னாள் மேயருமான ரோசி சேனாநாயக்கவின் மூத்த புதல்வர் கனிஷ்க சேனாநாயக்கவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கனிஷ்க சேனாநாயக்கவின் மறைவுச் செய்தி தமக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையை இழக்கும் துயரம் எந்த வயதிலும் பெற்றோருக்கு தாங்க முடியாத வேதனையாகும் என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக இளம் வயதில் ஏற்படும் பிள்ளையின் இழப்பு ஆற்ற முடியாத துயரத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன வலிமையும் தைரியமும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும், மறைந்த கனிஷ்க சேனாநாயக்கவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
