ஸ்பெயினில் கடுமையான வீட்டுமனை நெருக்கடியைச் சமாளிக்கக் கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசரப் பொதுத்தேர்தலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் வாடகை உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய மக்கள் ஆணையத்தைப் பெறும் நோக்கில் நவம்பர் 29 அன்று தேர்தல் நடைபெறவுள்ளமை குறி்பிடத்தக்கது.
