ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-ஆலம் இராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முகாமில் இருந்த 53 வீரர்கள் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. முகாமின் பயிற்சி மையம் மீது ஹவுதிக்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மஜித் அல்-நசிலி தெரிவித்தார்.
