யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை தெற்கு ஆட்சியாளர்களது விருப்பத்திற்குரியதாக்க தற்போதைய நிர்வாகம் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
முறைப்படி உரிய அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தினால், அந்த அனுமதியைப் பெறும் வரை இந்நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம்” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடப் பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவிததுள்ளார்.
பல்கலைக்கழக பொதுநூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான மு.திருநாவுக்கரசுவின் நூல் அறிமுக நிகழ்விற்கு, கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசியல் செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மு.திருநாவுக்கரசு எழுதிய “இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்” என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடப் பீடாதிபதி, அரசறிவியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர் கலந்துகொண்டு உரையாற்றவிருந்தனர்.
இந்நிலையில், நிகழ்வை நடத்த அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் வெளிநபர்களின் பங்கேற்பு காணப்பட்டால், அதற்கு முன்னதாகக் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சுற்றறிக்கையை முன்னிறுத்தியே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
