ஈரான் மீது போர் தொடுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவிற்கு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஈரான் அணுஆயுதத்தைப் பெற்றால் அதனை நிச்சயம் பயன்படுத்தும் என எச்சரித்துள்ள அவர், அதனைத் தடுப்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக எழுந்த ஊகங்களுக்கு மத்தியில் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதை இச்சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.
