யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இன்று இரவு 7 மணியளவில் கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
