இன்று (25) பிற்பகல் பெய்த கடும் மழையால் அக்குறணை பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய A9 பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன. கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் பல வீதிகளும் நீரில் மூழ்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருந்தது.கண்டி – பேராதனை – பெனிதெனிய வீதி, உடுநுவர – தவுலகல மற்றும் யாலேகொட ஆகிய வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
