அம்பாறை, பக்கீஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகலதென்ன பகுதியில் புதையல் தோண்டிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பக்கீஎல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று சனிக்கிழமை (03) இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பக்கீஎல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
