இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பல மூடைகளை ஏற்றிச் சென்ற, பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் உள்ளூர் மீன்பிடிப் படகு ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இந்த நடவடிக்கை குறித்த மேலதிக விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
