ஈரானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி கதார் அமைச்சரின் அழைப்பை ஏற்று டொஹாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர கதார் மத்தியஸ்தம் வகிக்கும் பின்னணியில், இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
