யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின் சிலை வைத்தமை தொடர்பிலான விசாரணைகளில், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட இருவரிடம் பொலிஸார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலம் பெற்றுள்ளனர்
தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபத்தின் சிலையை கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் எடுத்து சென்று இருந்தனர்
நகரங்களை ஆராய்க
அதனை தொடர்ந்து சிலை வைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரைவான விசாரணைகளை ஆரம்பித்து , யாழ்ப்பாணத்தில் உள்ள பிளாஸ்ரிக் தொழிற்சாலைகளில் கடுமையான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்
அதேவேளை சிலை வைப்பு தொடர்பில் , யாழ். மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட 06 பேரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் , தியாக தீபம் ஆவண காப்பக செயற்பாட்டளர் வரதராஜா பார்த்தீபன் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்திருந்தனர்
அந்நிலையில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் , தியாக தீபம் ஆவண காப்பக செயற்பாட்டளர் வரதராஜா பார்த்தீபன் ஆகியோரிடம் காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலான மூன்று மணி நேரம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றனர்.
