மக்காவில் உள்ள பள்ளிவாசலில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்குச் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இது குறித்துத் தங்களுக்கு முன்கூட்டியே உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை என ஜெத்தாவிலுள்ள பங்களாதேஷ் துணைத்தூதரகம் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
