தலைநிமிர்ந்து ஒரு
தாயகம் மிளிர்ந்தது.
தரணி வியந்திட – மாலதி
தாகத்தோடு போனாள்.
உரத்து குரலெடுத்து
ஊரெங்கும் சொல்லு.
வியர்த்து பயந்திட – அவள்
விடலை இல்லை.
வீரத்தலைவன் வழி
வழிநடந்து போனாள்.
விடுதலை வேண்டும்.
விடிந்திடும் வாழ்வினில்.
பேய்கள் வந்து இங்கே
பெண்கள் வாழ்வை
சிதைத்திடக் கண்டாள்.
சீறியெழுந்து போனாள்.
விடுதலை என்னும்
நெடுநீளப் போரில்
முதல் வித்தாகி போனாள்.
கோப்பாய் வெளியில்
பாரதப் படையோடு
பகையாடி வீழ்ந்தாள்.
வீழும்போதும் கூட அவள்
சுடுகலன் காத்தாள்.
தற்துணிவுக்கு இங்கே
சீருடை அணிந்து – அவள்
புன்னகை செய்தாள்
மான்னார் தந்த மகள்.
மறந்திட முடியாது
மறத்தமிழ் மகளை.
மாலதி என்ற புனை
சகாயசீலி என்ற இயல்
மாலதி பெயரில்
படையணி கண்டு
படைநடந்தது ஈழத்தில்.
வெற்றி பெற்று சென்றது.
இருகால்களிலும் அவள்
குண்டேந்தி சாய்ந்தாள்.
எதிர்பாராத அந்த மோதல்
மாலதியை மொனித்தது.
ஆண்டுகள் பலவாகினும்
நினைவுகள் மாறாது.
மலர்தூவி அஞ்சலிதனை
மனதால் செய்திடுவோம்.
……… அன்புடன் நதுநசி
