அமெரிக்கா இஸ்ரேலுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சாத்தியமான தரைவழித் தாக்குதலை எதிர்கொள்வதற்காக ஈரான் தனது நாட்டுப் பெண்களுக்கு தீவிர இராணுவப் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ஈரான் அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘ஜன்பதா’ ( உயிர்த்தியாகம்) எனப்படும் மக்கள் திரள் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
