ஈரான் முன்வைத்துள்ள ஏழு நிபந்தனைகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை, முக்கிய கடல்வழிப் பாதை மூடப்பட்டே இருக்கும் என ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரும் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். ஈரானின் ராஜதந்திர முன்மொழிவுக்கு அமெரிக்கா பதிலளித்த சில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்கா ஒரு மத்தியஸ்தர் ஊடாக சில முன்மொழிவுகளை முன்வைத்ததாக ஈரானிய அரசு ஊடகம் காலிபாஃபை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
