மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களது உரிமைப் போராட்டம் பல்வேறு தரப்பினராலும் கையாளப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷினால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
