தியாக தீபத்தின் தூபி அமைக்க வேண்டும் என்று யாழ்.மாநகர சபையில் கடந்த வருடம் உறுப்பினர் ஒருவர்; தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற அனுமதிகோரிய போது அது இலங்கையின் இறைமைக்கு பாதிப்பானதென இலங்கை தமிழரசுக்கட்சி சார்பு யாழ்.மாநகர முதல்வர் மறுதலித்தமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றிய விடயத்தில் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை எனவும் யாழ்.மாநகரசபையின் பொறுப்பற்ற நிர்வாக நடவடிக்கையெனவும் அரச அமைச்சர் சந்திரசேகர் நேற்றைய தினம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அவ்வாறு திலீபனின் சிலையை அகற்றிய விடயத்தில் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை தயவு செய்து எடுத்த சிலையை திருப்பி கொண்டு வந்து வைத்தால் பிரச்சினை முடிந்துவிடும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் சிலை நேற்றைய தினம் (27) அகற்றப்பட்டமை குறித்து இன்று (27) அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலே அவரை அதனை தெரிவித்திருந்தார்.
நானும் தமிழரசுக் கட்சியும் சிலை வைப்புக்கு எதிரானதாகவும், காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணை போனதாகவும் அல்லது எங்களுடைய கோரிக்கையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில காரியங்களை திட்டமிட்டு செய்திருக்கிறதெனவும் சீ.வீ.கே.சிவஞனாம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிலையை அகற்றவதற்கு, தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையும் ஒரு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா
