பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் கிழக்கு மாகாணத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் 5 கொலைச் சம்பவங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் அவர் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இன்று காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
