இந்தியாவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை மகளிர் அணிக்காக விளையாடி யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் இளவாலையைச் சேர்ந்த விமலேந்திரன் டிலக்சனா.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி!
லீக் சுற்றில் பங்களாதேஷ் மகளிர் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 31–20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் தனது வேகம், திறமை மற்றும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார் டிலக்சனா.
‘சிறந்த ரைடர்’ விருது!
போட்டியில் வெளிப்படுத்திய சிறப்பான திறமையைப் பாராட்டி, டிலக்சனாவுக்கு ‘சிறந்த ரைடர்’ (Best Raider) விருது வழங்கப்பட்டுள்ளது.
இளவாலை மண்ணில் இருந்து சர்வதேச கபடி அரங்குவரை தனது திறமையால் உயர்ந்து, இலங்கை தேசிய அணிக்குப் பெருமை சேர்த்துள்ள டிலக்சனாவின் சாதனை பாராட்டுக்குரியது.
அவரது விளையாட்டுப் பயணம் மேலும் பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுத் தர மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ்ப்பாணத்தின் பெருமை! இலங்கையின் சாதனை!
