மூன்று பதக்கங்களையும் வென்ற இந்தியர்கள். – படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா
Updated On :21 அக்டோபர் 2026, 3:32 pm
ஆசிய பாரா விளையாட்டில் எஃப் 46 குண்டு எறிதல் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்தையும் இந்திய வீரர்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
இந்திய வீரர் சச்சின் கிலாரி குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் முன்னதாக 2024 பாரீஸ் பாராலிம்பிக்ஸில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்திய வீரர் சச்சின் சர்ஜெராவ் கிலாரி தனது கடைசி முயற்சியில் அதிகபட்ச தூரமான 15.87 மீட்டருக்கு எறிந்து, தங்கம் வென்றார்.
முன்னதாக இந்தப் பிரிவில் 15.67 மீட்டருக்கு குண்டு எறிந்ததே முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனை இந்தியரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு இந்திய வீரர் முகமது யாசீர் தனது மூன்றாவது முயற்சியில் 15.67 மீட்டருக்கு குண்டு எறிந்து வெள்ளி வென்றார். மற்றுமொரு இந்தியர் பிரவின் 14.94 மீட்டருக்கு எறிந்து வெண்கலம் வென்றார்.Advertise with us
மூன்று பதக்கங்களையும் இந்தியர்களே வென்று அசத்தியுள்ளார்கள். F46 பிரிவு என்பது, முழங்கைக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒற்றை உறுப்பு நீக்கம் செய்யப்பட்ட, அல்லது அதற்கு இணையான மேற்கை குறைபாடு உள்ள தடகள விளையாட்டு வீரர்களுக்கானது.
இவர்கள் நேராக நின்றுகொண்டு தங்களது இடுப்பு மற்றும் கால்களின் மூலமாக ஆற்றலைப் பயன்படுத்தி குண்டு எறிவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்தியாவுக்கு 12 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் வென்றுள்ளன. மொத்தமாக 47 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.
