நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இயக்குநர் ஹரிஷ் சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு முறையாக நடைபெற உள்ளது.
