செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமைய புதைக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தெரிவித்துள்ளார். அதன் போது, பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த தடயவியல் அறிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் பலரும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.
