ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இன்று (நவ. 23) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனி முழுவதும் 450 பள்ளிகளுக்கு இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை தொடர்புகொள்ளப்பட்ட பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை’
