யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், செம்மணி புதைகுழி என்று சந்தேகிக்கப்படும் இடத்திற்குச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகையை ஏற்பாடு செய்வதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
