முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பிள்ளையான் என அழைக்கப்படுபவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
