இஸ்ரேலிய நடவடிக்கைகளையும் மொசாட் உளவாளிகளையும் இலங்கைக்குள் அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே ரஹ்மான் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
