ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘கைவாறு முத்து’ என்ற தமிழ் பாதாள உலக முக்கியஸ்தரான மனோஜ் முத்துகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மனோஜ் முத்துகுமார் அல்லது ‘கைவாறு முத்து’ என்பவரே, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மனோஜ் முத்துகுமார் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான ‘சமயங்’ என்பவரின் முக்கிய சகா எனக் காவற்துறையினரால் சந்தேகிக்கப்படுகின்றார்.
