முன்னாள் ஆசிரியையான திருமதி கமலா குணராஜா மற்றும் எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் புதல்வியுமான திருமதி ரேணுகா பிரதீப்குமார் (88 Batch) அவர்கள், 26.06.2026 அன்று கொழும்பில் காலமானார் என்பதை மிகுந்த மனவேதனையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் கொழும்பு யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் அர்ப்பணிப்புமிக்க உறுப்பினராகச் செயல்பட்டு வந்ததுடன், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 25வது “யாழ் நாதம்” இதழின் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் உரித்தாக்குகின்றோம்.
ஓம் சாந்தி
