ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்பொழுது தேர்தல் அணுகு முறைகளினால் தேர்தல்களை வெற்றிகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். தற்பொழுது அனைத்து விடயங்களும் மாற்றம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
