சர்வதேச பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான புலம்பெயர்தலுக்கான உலகளாவிய உடன்படிக்கையின் 2026-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டமானது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தலைமையின் கீழ் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் புலம்பெயர்தல் வலையமைப்பின் செயலகமாகச் செயற்படும் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பின் ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
