அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான புதிய சட்டமூலம் (PSD Act / Repression Bill), இலங்கையை ஒரு காவல்துறை அரசாக மாற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதைய சட்டமூலத்தின் சில பிரிவுகள், இலங்கையில் ஜனநாயகத்தை நசுக்கி, காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டப்படுகிறது.
