ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே எதிர்க்கட்சியினர் தோற்றுவித்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய தரப்பினர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல எனவும் கூறியுள்ளார்.
