அம்பாறை – சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் நேற்று (17-11-2026) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட விளினியடி மற்றும் செந்நெல் கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக எட்டு கிராம் 232 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
