ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தின் ஒரு பகுதி உக்ரைன் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இடிந்து கடலுக்குள் விழுந்துள்ளதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள இரண்டு முக்கியப் பாலங்கள் மீது ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
